Saturday, December 19, 2009
ஐரோப்பாவின் பனிப்பொழிவுகள்
ஐரோப்பாவின் பனிப்பொழிவுகள் மக்களை மட்டுமல்ல ரயில் போக்குவரத்துகளுக்கும் தான் தடங்கல்களை ஏற்படுத்துகின்றன். பிரித்தானியாவில் கடந்த வெள்ளிக் கிழமை ஏற்பட்டிருக்கின்ற பனிப்பொழிவால் Eurostar ரயில் சேவை பாதிப்புள்ளாகியுள்ளது. பிரித்தானியாவிற்கும் பிரான்ஸிற்கும் இடையிலான போக்குவரத்து சேவையே இது. இதனால் கிட்டத்தட்ட 2000ற்கும் மேற்பட்ட மக்கள் குளிராலும் பசியாலும் வாடியிருக்கின்றார்கள். தடைப்பட்டிருக்கின்ற ரயில் போக்குவரத்து ஞாயிற்றுக்கிழமை சரிசெய்யப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப் படுகின்றது, பிரித்தானியாவில் இருந்து பிரான்ஸிற்குச் செல்லும் பல பயணிகளில் பலர் மீண்டும் பிரித்தானியாவிற்குத் திரும்பியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 7 பாகை செல்சியசிலும் குறைவான வெப்பநிலை நிலவியதன் காரணமாகவே இந்தத் தடங்கல் ஏல்பட்டிருக்கின்றது.ரயில் பயணங்கள் மட்டுமல்லாமல் விமானப்போக்குவரத்தும் கடந்த இரண்டு ஈண்டுகளாகத் தடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Saturday, August 22, 2009
Mine...........
Subscribe to:
Posts (Atom)